LATEST NEWS
அரசு மருத்துவமனையில் அட்டூழியம்..! பெண் ஊழியர் மேல் பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு… தப்ப முயன்ற ரவுடியை காலில் சுட்டுப்பிடித்த தனிப்படை போலீஸ்..!!
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியராகப் பணிபுரியும் ராஜேஸ்வரி என்ற பெண் மீது, நேற்று இரவு மருத்துவமனை வளாகத்திலேயே மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் ஊற்றித் தீ வைத்துள்ளார். உடல் முழுவதும் தீ பரவி அலறிய ராஜேஸ்வரியை அங்கிருந்த ஊழியர்கள் மீட்டு, மேல் சிகிச்சைக்காகச் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இச்சம்பவம் தொடர்பாகப் பொன்னேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே, தலைமறைவாக இருந்த குற்றவாளியான பிரகாஷ் என்பவரைப் பொன்னேரி சுடுகாட்டுப் பகுதியில் போலீசார் பிடிக்க முயன்றனர். அப்போது அவர் தப்பியோட முயன்று, சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசனை அரிவாளால் வெட்டியுள்ளார். இதனால், தற்காப்புக்காக இன்ஸ்பெக்டர் சிவக்குமார் குற்றவாளி பிரகாஷின் காலில் சுட்டுப் பிடித்தார். காயமடைந்த அந்த நபரைக் கைது செய்த போலீசார், மருத்துவமனை ஊழியர் மீது தீ வைத்ததற்கான விபரம் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
