மாஸ்..! பள்ளி மாணவர்களுடன் தரையில் அமர்ந்து சாப்பிட்ட முதலமைச்சர் விஜய்.. காலை உணவு திட்டம் விரிவாக்கம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மாஸ்..! பள்ளி மாணவர்களுடன் தரையில் அமர்ந்து சாப்பிட்ட முதலமைச்சர் விஜய்.. காலை உணவு திட்டம் விரிவாக்கம்..!!

Published

on

தமிழக முதலமைச்சர் விஜய், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான “பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை” சென்னை திருவான்மியூர் காந்திகிராமத்தில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் இன்று தொடங்கி வைத்தார். விழாவிற்குப் பிறகு, முதலமைச்சர் விஜய் பள்ளி மாணவர்களுடன் தரையில் அமர்ந்து அரட்டையடித்தபடி காலை உணவை ஒன்றாக உட்கொண்டார். த.வெ.க. ஆட்சி அமைந்த பிறகு இத்திட்டத்தின் பெயர் மாற்றப்பட்டு, தற்போது கூடுதலாக ரூ.217.63 கோடி நிதியொதுக்கீட்டுடன் நடுத்தர வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

சட்டமன்ற இடைத்தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய பகுதிகளைத் தவிர்த்து, தமிழகத்தின் மற்ற அனைத்து மாவட்டங்களிலும் இந்த விரிவாக்கத் திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக 44,984 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 34.64 லட்சம் மாணவ-மாணவிகள் பயனடைவார்கள். சமையற்கூடங்களைச் சுத்தமாகப் பராமரிப்பதோடு, மாணவர்களுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவு தடையின்றி கிடைப்பதைத் தொடர்ச்சியாகக் கண்காணிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in