LATEST NEWS
BREAKING: காலை உணவு திட்டத்தின் பெயர் மாற்றம்.. முதல்வர் விஜய் அதிரடி..!!
தமிழகத்தில் தவெக அரசு, திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ‘முதல்வரின் காலை உணவு திட்டம்’ என்ற பெயரினை ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்’ என அதிகாரப்பூர்வமாக பெயர் மாற்றம் செய்துள்ளது. ஏழை மற்றும் எளிய பள்ளி மாணவர்களின் பசியைப் போக்கி, அவர்களின் கல்வித் தரத்தை உயர்த்திய கர்மவீரர் காமராஜரின் கல்விப் பணியைப் போற்றும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திமுக அரசு கொண்டுவந்த பல்வேறு மக்கள் நலத் திட்டங்களின் பெயர்களை, தற்போதைய தவெக அரசு தொடர்ச்சியாக மாற்றி அமைத்து வரும் அரசியல் சூழலில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இத்துடன், இந்த காலை உணவுத் திட்டத்தில் ஒரு முக்கிய விரிவாக்கத்தையும் தவெக அரசு மேற்கொண்டுள்ளது. இதுவரை ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த இந்த உணவுத் திட்டம், தற்போது 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கூடுதல் எண்ணிக்கையிலான நடுநிலைப் பள்ளி மாணவர்கள் பயனடைவதோடு, மாணவர்களின் ஊட்டச்சத்தும் பள்ளி வருகைப்பதிவும் கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
