LATEST NEWS
“நடமாடும் தெய்வம்டா இவரு!.. ஓட்டுநரின் உயிரைக் காப்பாற்ற முதலாளி செய்த காரியம்… மருத்துவமனையே வியந்து நின்ற தருணம்.. நெட்டிசன்களை நெகிழ வைத்த வைரல் பதிவு”…!!
அற்ப விஷயங்களால் மனித உறவுகள் சிதையும் இந்தக் காலத்தில், மனிதநேயம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை மும்பையில் நடந்த ஒரு சம்பவம் நிரூபித்துள்ளது. இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரஷாந்த் மிஸ்ரா பகிர்ந்துள்ள பதிவில், பைபாஸ் அறுவை சிகிச்சைக்காகத் தன்னை அணுகிய ஒரு ஓட்டுநருக்குத் தனியார் மருத்துவமனைச் செலவு அதிகமாக இருக்கும் என்பதால் அரசு மருத்துவமனைக்குச் செல்ல அறிவுறுத்தியுள்ளார். ஆனால், அடுத்த நாளே அந்த ஓட்டுநரின் முதலாளி சற்றும் யோசிக்காமல் ரூ.4.25 லட்சம் முழுச் செலவையும் நேரடியாக மருத்துவமனைக் கணக்கில் செலுத்தி அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்ய உதவியுள்ளார்.
A patient came to me needing bypass surgery. Since he worked as a driver and the procedure at our hospital costs around 4.25 lakh rs , I advised him to go to a civic (BMC) hospital where the surgery could be performed free of cost through a government scheme.
That evening, his…— Dr Prashant Mishra (@drprashantmish6) July 22, 2026
அறுவை சிகிச்சைக்குப் பின் நன்றி தெரிவிக்கத் தொடர்புகொண்ட மருத்துவரிடம், அந்த முதலாளி “அவர் என் வேலைக்காரர் அல்ல, கடந்த 15 ஆண்டுகளாக என்னுடன் பணியாற்றும் சக ஊழியர். எங்கள் பணிகள் வேறாக இருந்தாலும் நாங்கள் ஒன்றாகவே உழைக்கிறோம்” என்று கூறியது மருத்துவரை வியப்பில் ஆழ்த்தியது. நம் அன்றாட வாழ்க்கையை எளிதாக்கும் பணி ஆட்களைத் தாழ்வாகப் பார்க்காமல் சமமாக மதிக்க வேண்டும் என்ற உயர் சிந்தனையை உணர்த்திய இந்தச் சம்பவம், தற்போது சமூக ஊடகங்களில் நெட்டிசன்களின் பாராட்டுகளைப் பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
