LATEST NEWS
“ரூ.500-க்கு ஆசைப்பட்டு போலீஸ்ட்ட 5 அடி வாங்க முடியாது..!” வாலிபரை பழிவாங்க ஸ்கெட்ச் போட்ட பெண்… நடுரோட்டில் பல்டி அடித்த நேர்மையான ரேபிடோ ஓட்டுநர்.. இணையத்தை கலக்கும் சம்பவம்…!!
ரேபிடோ பைக் டாக்ஸி ஓட்டுநர் ஒருவரிடம், நீதிமன்றத்தில் பொய் சாட்சியம் சொல்வதற்காக இளம் பெண் ஒருவர் லஞ்சம் கொடுக்க முயன்ற வினோதமான மற்றும் அதிர்ச்சிகரமான சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இளம் பெண் ஒருவர் ரேபிடோ பைக்கை புக் செய்துள்ளார். குறிப்பிட்ட நேரத்திற்கு வந்து ஓடிபி எண்ணைப் பெற்றுக்கொண்ட அந்த ஓட்டுநர், அந்தப் பெண்ணை அவரது முகவரியில் பத்திரமாக இறக்கி விட்டுள்ளார். அந்தப் பயணத்திற்கான கட்டணம் 300 ரூபாய் மட்டுமே ஆன நிலையில், அந்தப் பெண் ஓட்டுநரிடம் 800 ரூபாயைக் கொடுத்துள்ளார். எதற்காக 500 ரூபாய் கூடுதலாகக் கொடுக்கிறீர்கள் என்று ஓட்டுநர் கேட்டபோது, அந்தப் பெண் அவரிடம் ஒரு அதிர்ச்சிகரமான கோரிக்கையை வைத்துள்ளார்.
“நீதிமன்றத்தில் நான் ஒருவருக்கு எதிராகப் பொய் சாட்சியம் சொல்ல வேண்டும், அதற்குத்தான் இந்த 500 ரூபாய். இன்னும் கூடுதலாகப் பணம் வேண்டுமானாலும் தருகிறேன்” என்று அந்தப் பெண் கூறியுள்ளார். ஏதோ ஒரு இளைஞர் மீது அந்தப் பெண் பழிவாங்கும் நோக்கில் சோடிக்கப்பட்ட பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளதும், அதை நீதிமன்றத்தில் நிரூபிக்க இந்த ரேபிடோ ஓட்டுநரை விலைக்கு வாங்க முயன்றதும் தெரியவந்தது. ஆனால், அந்த ஓட்டுநர் பேராசைப்படாமல், “நான் எந்தப் பொய் சாட்சியமும் சொல்ல மாட்டேன்; இந்த 500 ரூபாய்க்கு ஆசைப்பட்டு பின்னாடி போலீசிடம் 5 அடி வாங்க நான் தயாராக இல்லை” என்று நெற்றியடியாகப் பதிலளித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார். நீதிமன்றத்தில் பொய் சாட்சியம் சொல்வது சட்டப்படி கடுமையான சிறைத்தண்டனைக்குரிய குற்றம் என்பதை உணர்ந்து நேர்மையாக நடந்துகொண்ட அந்த ஓட்டுநரை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
