“உயிரோடுதான் இருக்கேன்.. ஆனா எனக்கு இறப்பு சான்றிதழ் கொடுங்க” – கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி மனு.. அதிகாரிகளின் அலட்சியத்தால் நேர்ந்த கொடூரம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“உயிரோடுதான் இருக்கேன்.. ஆனா எனக்கு இறப்பு சான்றிதழ் கொடுங்க” – கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி மனு.. அதிகாரிகளின் அலட்சியத்தால் நேர்ந்த கொடூரம்..!!

Published

on

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், கே.ஜி. ஏரியூர் பகுதியைச் சேர்ந்த 47 வயது விவசாயக் கூலித் தொழிலாளியான காந்தி என்பவர், “உயிருடன் இருக்கும் எனக்கு இறப்பு சான்றிதழ் வழங்க வேண்டும்” என விசித்திரமான புகார் மனு ஒன்றை அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2025-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இவரது தந்தை ஆனந்தன் இறந்தபோது, அதிகாரிகள் தவறுதலாக ரேஷன் அட்டையில் இருந்து தந்தையின் பெயருடன் சேர்த்து காந்தியின் பெயரையும் நீக்கியுள்ளனர்.

இதனால் கடந்த 18 மாதங்களாக இவருக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படவில்லை. ரேஷன் அட்டையில் தனது பெயரை மீண்டும் சேர்க்கக் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும், அதிகாரிகள் அலட்சியமாகப் பதிலளித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதற்கிடையே, இவரது மகன்களான பூவரசன் மற்றும் பேரரசன் ஆகிய இருவரும் தற்போது இந்திய ராணுவத்திற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

ராணுவப் பணிக்கான ஆவணங்களைச் சமர்ப்பிக்கும் போது, ரேஷன் அட்டையில் தந்தை பெயர் இல்லாத காரணத்தால் அவரது மகன்களுக்கு வேலை கிடைப்பதில் கடுமையான சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான காந்தி, “ஒன்று எனது பெயரை ரேஷன் அட்டையில் உடனடியாகச் சேருங்கள், இல்லையென்றால் உயிருடன் இருக்கும் எனக்கு இறப்பு சான்றிதழையாவது கொடுங்கள்” என அதிகாரிகளுக்கு எதிராக விரக்தியுடன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in