“பாலியல் தொழிலில் கடன்.. புரோக்கரை கொன்று புதைத்த கூட்டாளிகள்.. கணவரை காணவில்லைனு கதறிய மனைவி… “போலீஸ் விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை..!! – cinefeeds
Connect with us

CRIME

“பாலியல் தொழிலில் கடன்.. புரோக்கரை கொன்று புதைத்த கூட்டாளிகள்.. கணவரை காணவில்லைனு கதறிய மனைவி… “போலீஸ் விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை..!!

Published

on

வேலூர் மாவட்டம் திருவலம் அடுத்த அம்மூண்டி பகுதியைச் சேர்ந்த தேவராஜ் (33), காகிதப்பட்டறை பகுதியில் உள்ள லாட்ஜில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி நதியா காட்பாடி கல்வி நிறுவன கேண்டினில் பணிபுரிகிறார். காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்கள் காட்பாடி கிளித்தான்பட்டையில் வாடகைக்கு வசித்து வந்த நிலையில், கடந்த 9-ம் தேதி முதல் கணவரை காணவில்லை என நதியா வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்பொழுது, சேண்பாக்கத்தைச் சேர்ந்த யாஷின் (35), சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த உமர் (28) ஆகியோர் தனது கணவரை காரில் அழைத்துச் சென்றதாக அவர் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் கடந்த 14-ம் தேதி இரவு இருவரையும் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், யாஷின் பாலியல் தொழில் புரோக்கராக செயல்பட்டதும், அவருடன் தேவராஜ் வேலை செய்ததும் தெரியவந்தது. மேலும், பாலியல் தொழில் செய்யும் தேஜாஸ்ரீ என்ற பெண்ணிடம் தேவராஜ் 2 லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாகவும், அதனைத் திருப்பித் தராததால் தேஜாஸ்ரீ யாஷினைத் தொடர்பு கொண்டு புகார் கூறியதாகவும் தெரியவந்துள்ளது. இதையடுத்து யாஷினும் உமரும், தேவராஜை காரில் ஏற்றி கே.வி.குப்பம் அருகே உள்ள மேல் விளாச்சூர் பகுதியில் உள்ள உமரின் வீட்டுக்கு அழைத்துச் சென்று மிரட்டியுள்ளனர். அப்போது அவர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த உமரும் யாஷினும் ஆடு வெட்டும் கத்தியால் தேவராஜின் கழுத்தில் வெட்டியுள்ளனர். இதில் தேவராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை அடுத்து, உடலை உமரின் வீட்டுக்குப் பின்னால் அவர்கள் புதைத்துள்ளனர்.

Advertisement

கொலை தொடர்பாக யாசினின் மனைவி ஹரி சுதாவிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, கடந்த 15-ம் தேதி கொலையாளிகள் அடையாளம் காட்டியதை அடுத்து, தேவராஜின் உடல் புதைக்கப்பட்ட இடத்திலிருந்து தோண்டி எடுக்கப்பட்டது; உடலை பார்த்து அவரது மனைவி நதியா கதறி அழுதுள்ளார். மேலும், மாடு இறந்துவிட்டதாகக் கூறி ஜேசிபி இயந்திரத்தை வரவழைத்து ஆறடி நீளத்திற்கு குழி தோண்டச் செய்து, ஆபரேட்டரை அனுப்பிவிட்டு தேவராஜின் உடலை அதில் புதைத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. லத்தேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விக்கிரமாசி மேடு பகுதியில் வீடு எடுத்து பாலியல் தொழில் நடத்தி வந்த யாசின், பின்னர் அங்கிருந்து மாறி தற்போது மேல்விலாச்சூர் பில்லாந்திபட்டு ரோடு பகுதியில் தனி வீட்டில் இத்தொழிலைத் தொடர்ந்து வந்ததும் அம்பலமாகியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in