“என்னை கொடூரமாக சித்திரவதை செய்தான்..” இன்ஸ்டாகிராமில் வெளியான அந்த கடைசி பதிவு.. 19 வயது இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“என்னை கொடூரமாக சித்திரவதை செய்தான்..” இன்ஸ்டாகிராமில் வெளியான அந்த கடைசி பதிவு.. 19 வயது இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!

Published

on

அசாம் மாநிலம் லம்டிங்கில் 19 வயது இளம் பெண் சப்தமி தேப்நாத் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது . தான் உயிரிழப்பதற்கு முன்பாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், காதலன் ரோஹித் தாஸ் தன்னைத் தொடர்ந்து உடலளவிலும் மனதளவிலும் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கி வந்ததாகச் சப்தமி பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருந்தார். இந்த மர்ம மரணத்தைத் தொடர்ந்து, சப்தமிக்கு நீதி கோரியும் குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்க வலியுறுத்தியும் லம்டிங் காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப் பொதுமக்கள் மற்றும் போராட்டக்காரர்கள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இச்சம்பவத்திற்குப் பிறகு ஐந்து நாட்களாகத் தலைமறைவாக இருந்த காதலன் ரோஹித் தாஸை, காவல்துறையினர் மேகலாயா மாநிலம் ஷில்லாங்கில் வைத்து அதிரடியாகக் கைது செய்துள்ளனர். மேலும், இந்தச் சித்திரவதை மற்றும் தற்கொலைத் தூண்டல் விவகாரத்தில் தொடர்புடையதாக ரோஹித் தாஸின் தாயாரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் காதலனின் கொடூர முகத்தை அம்பலப்படுத்திவிட்டு இளம் பெண் உயிரிழந்த இந்தச் சம்பவம் அசாமிஸ்தான் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in