CRIME
“வேலை தருவதாக ஆசை வார்த்தை” இளம்பெண்ணை ஆட்டோவில் கடத்தி மரங்களுக்கு இடையே நடந்த கொடூரம்… நாட்டையே உலுக்கிய சம்பவம்..!!
ராயதுர்கத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், வேலை தேடிக்கொண்டிருந்த பெண்ணொருவருக்கு நல்ல வேலையைப் பெற்றுத் தருவதாகப் பொய் வாக்குறுதி அளித்து ஆசை வார்த்தைகளைக் கூறியுள்ளார். அதைக் நம்பிய அந்தப் பெண் வீட்டிற்குச் செல்லும் வழியில் இருந்தபோது, அந்த இளைஞர் அவளைத் தன் ஆட்டோவில் ஏற்றிச் சென்றுள்ளார். பின்னர் அவளை நேராக ஜூப்ளி ஹில்ஸ் பகுதிக்கு அழைத்துச் சென்றதுடன், மக்கள் நடமாட்டம் இல்லாத சாலையின் ஒதுக்குப்புறமான பகுதிக்குக் கூட்டிச் சென்றுள்ளார்.
யாரும் இல்லாத மரங்களுக்கு இடையே அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்ற அந்த வாலிபர், அங்கு வைத்து அவளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்துக் கொடூரமாகப் பலாத்காரம் செய்துள்ளான். தன் கயமைத்தனமான செயலை முடித்துக்கொண்ட அந்த நபர், அங்கிருந்து தப்பியோடிவிட்டான். பாதிக்கப்பட்ட அந்தப் பெண் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் ஜூப்ளி ஹில்ஸ் காவல்துறையினர் உடனடியாக வழக்குப்பதிவு செய்தனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவப் பரிசோதனைக்காக அமீர்பேட்டில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்திற்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு தப்பியோடிய குற்றவாளியைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். வேலை வாங்கித் தருவதாகக் கூறி பெண்ணை ஏமாற்றிப் பாலியல் வன்கொடுமை செய்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
