LATEST NEWS
ஐயோ கடவுளே.. “நடைபாதையில் பெற்றோர் அருகே தூங்கிய 4 வயதுக் குழந்தை..” நள்ளிரவில் ஸ்கூட்டரில் வந்த ஜோடி செய்த பகீர் காரியம்.. திடுக்கிடவைக்கும் சிசிடிவி வீடியோ..!!
விசாகப்பட்டினம் இரயில் நிலையம் அருகே, நள்ளிரவில் நடைபாதையில் பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த 4 வயதுப் பெண் குழந்தை கடத்தப்பட்ட பதைபதைக்கும் சம்பவம் சிசிடிவி காட்சிகளின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. விஜயவாடாவைச் சேர்ந்த சையத் அப்துல் ஹஃபீஸ் மற்றும் அவரது மனைவி சையத் சேசம்மா ஆகிய தம்பதியினர், கடைகளுக்கு ஊதுபத்தி விற்றுத் பிழைப்பு நடத்துவதற்காக 3 நாட்களுக்கு முன்பு விசாகப்பட்டினம் வந்துள்ளனர். அவர்கள் இரயில் நிலையத்திற்கு எதிரே உள்ள பேருந்து நிறுத்த நடைபாதையில் தங்களது 4 வயது மகளுடன் தூங்கிக் கொண்டிருந்தபோது, அங்கு ஸ்கூட்டரில் வந்த ஒரு இளம் பெண்ணும் வாலிபரும், தூங்கிக் கொண்டிருந்த அந்தக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு நொடிப் பொழுதில் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
https://twitter.com/pulsenewsbreak/status/2093214948767981995/video/1
இந்தக் கொடூரமான கடத்தல் சம்பவம் குறித்துப் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீஸார், கடத்தல்காரர்களை அதிரடியாக அடையாளம் கண்டுள்ளனர். ஸ்கூட்டரில் வந்த அந்த நபர்கள் குழந்தையைக் காஜுவாக்கா பகுதியை நோக்கித் தூக்கிச் சென்றது சிசிடிவி மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இக்குற்றச்செயலில் ஈடுபட்ட கடத்தல்காரர்கள் பிரதிபா மற்றும் உபேந்திரா என அடையாளம் காணப்பட்டுள்ள சூழலில், குழந்தையைப் பத்திரமாக மீட்கவும் குற்றவாளிகளைக் கைது செய்யவும் போலீஸார் தற்போது தீவிரத் தேடுதல் வேட்டையைத் (Search Operation) தொடங்கியுள்ளனர்.
