உஷார்..! ரயில்களில் குப்பை போட்டால் இனி 1,000 ரூபாய் அபராதம்.. ரயில் பயணிகளுக்கு ஆப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

உஷார்..! ரயில்களில் குப்பை போட்டால் இனி 1,000 ரூபாய் அபராதம்.. ரயில் பயணிகளுக்கு ஆப்பு..!!

Published

on

ரயில்கள் மற்றும் ரயில் நிலைய வளாகங்களில் குப்பைகளை வீசுபவர்களுக்கான அபராதத் தொகையை இந்திய ரயில்வே அமைச்சகம் 500 ரூபாயில் இருந்து 1,000 ரூபாயாக உயர்த்தியுள்ளது. ரயில்வே நிர்வாகத்திற்குச் சொந்தமான இடங்களில் தூய்மையைப் பராமரிப்பதையும், பயணிகள் பொறுப்பற்ற முறையில் குப்பை போடுவதைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ரயில் நிலையங்களையும் ரயில்களையும் தூய்மையாக வைத்திருப்பது பொதுமக்களின் கடமையாகும். எனவே, பயணிகள் அனைவரும் தங்களின் குப்பைகளை ஆங்காங்கே வீசாமல், அதற்கு என ஒதுக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் மட்டுமே போட்டு ரயில்வேயின் தூய்மைப் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in