LATEST NEWS
#BREAKING: “மீட்புப் பணிகளில் வெளிநாடுகளின் உதவி தேவை இல்லை” – நேபாள வெளியுறவு அமைச்சகம்..!!!
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ள மீட்புப் பணிகளில் வெளிநாடுகளின் உதவி தேவையில்லை என அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. இந்தியா, சீனா, அமெரிக்கா, ஜப்பான், இலங்கை, தென் கொரியா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தங்களது மீட்புக் குழுக்களைப் பணியில் ஈடுபடுத்த நேபாள அரசிடம் அனுமதி கோரியிருந்த நிலையில், நேபாளம் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.
தற்போது நேபாளத்தில் நிலவி வரும் இந்த மோசமான இயற்கை பேரிடரால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ள சூழலில், சுமார் 30 நாடுகளைச் சேர்ந்த 1400 பேர் மாயமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. சர்வதேச நாடுகளின் உதவிகளைப் பெற்று மீட்புப் பணிகளை விரைவுபடுத்துவதை விடுத்து, நேபாள அரசு ‘உதவி வேண்டாம்’ என மறுத்திருப்பது உலக அரங்கில் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
