LATEST NEWS
பகீர் காட்சி..! நள்ளிரவில் குரைத்த நாய்… எழுந்து குளியலறையில் பார்த்தபோது காத்திருந்த அதிர்ச்சி… அந்த காட்சியை நேருக்கு நேர் பார்த்து அலறியடித்து ஓடிய குடும்பம்..!!
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் நள்ளிரவில் வீட்டின் குளியலறைக்குள் 7 அடி நீளமுள்ள பிரம்மாண்ட முதலை ஒன்று புகுந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. மாலதாஜ் கிராமத்தைச் சேர்ந்த பாலாபாய் சவுகான் என்ற நபர் தனது குடும்பத்தினருடன் இரவில் தூங்கிக் கொண்டிருந்தபோது, வீட்டின் வெளியே வளர்ப்பு நாய்கள் தொடர்ந்து குரைக்கும் சத்தம் கேட்டுள்ளது. ஏதோ விபரீதம் என்பதை உணர்ந்து அவர் வெளியே வந்து சோதித்தபோது, குளியலறையில் 7 அடி நீள முதலை ஒன்று அசையாமல் அமர்ந்திருப்பதை நேருக்கு நேர் கண்டு உறைந்துபோனார்.
முதலையைப் பார்த்ததும் பீதியடைந்த குடும்பத்தினர், அதனைத் தாங்களாகவே விரட்ட முயலாமல் புத்திசாலித்தனமாக உடனடியாக வனத்துறைக்குத் தகவல் கொடுத்தனர். வனக் காவலர்கள் மற்றும் ‘தயா ஃபவுண்டேஷன்’ என்ற வனவிலங்கு மீட்பு அமைப்பின் தன்னார்வலர்கள் அடங்கிய குழுவினர் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த ஆபத்தான போராட்டத்திற்குப் பிறகு, முதலையையோ அல்லது அருகில் இருந்த பொதுமக்களையோ காயப்படுத்தாமல் அந்த 7 அடி முதலையைப் பத்திரமாக மீட்ட மீட்புக் குழுவினர், அதனை அருகில் உள்ள குளம் ஒன்றில் பாதுகாப்பாக விடுவித்தனர்.
இந்த விபத்து குறித்து வனத்துறை அதிகாரிகள் விளக்கம் அளிக்கையில், தற்போதைய பருவமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக நீர்நிலைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், முதலைகள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவது அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த கிராமத்திற்கு அருகில் உள்ள ஒரு குளத்தில் 100-க்கும் மேற்பட்ட முதலைகள் வாழ்ந்து வருவதால், மழைக்காலங்களில் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், முதலைகளைக் கண்டால் உடனடியாக வனத்துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
