LATEST NEWS
“தமிழ்நாட்டுக்கு அடித்த ஜாக்பாட்..! ஒரே நாளில் 4 சர்வதேச ஜாம்பாவன்களுடன் கையெழுத்தான மெகா டீல்.. 2,900+ பேருக்கு வேலைவாய்ப்பு… அதிரடி காட்டிய தொழிற்துறை..!!!”
தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உற்பத்தி மற்றும் உயர்கல்வி உள்ளிட்ட முக்கியத் துறைகளில் புதிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில், 4 சர்வதேச முன்னணி நிறுவனங்களுடன் தமிழக அரசு இன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் Chubb, ஜெர்மனியின் Nordex, தென்கொரியாவின் MotiveLink மற்றும் மேற்கு ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் தொழில் வழிகாட்டி நிறுவன வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்த முக்கிய முதலீடுகளின் மூலமாகத் தமிழ்நாட்டின் தொழிற்துறை வளர்ச்சி மேலும் விரைவுபடுத்தப்படுவதோடு, சுமார் 2,920-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகவுள்ளன. திறன் மேம்பாடு, தொழில்நுட்பப் பரிமாற்றம் மற்றும் சர்வதேச நிறுவனங்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கிலும், மாநிலத்தை உலகளாவிய முதலீட்டாளர்களின் முதன்மை முகவரியாக மாற்றும் முயற்சியின் தொடர்ச்சியாகவும் இந்த ஒப்பந்தங்கள் பார்க்கப்படுகின்றன.
