BREAKING: தாமிரபரணி ஆற்றில் ஆடைகளை வீசக்கூடாது… சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு திறடி உததரவு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BREAKING: தாமிரபரணி ஆற்றில் ஆடைகளை வீசக்கூடாது… சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு திறடி உததரவு..!!

Published

on

தாமிரபரணி ஆற்றில் ஈமச்சடங்கு என்ற பெயரில் ஆடைகள், மாலைகள் மற்றும் பிற பொருட்களை வீசி எறிந்து மாசடைவதைத் தடுக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடித் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மத சடங்குகளின் பெயரால் நீர்நிலைகளை மாசுபடுத்த யாருக்கும் உரிமை இல்லை எனக் குறிப்பிட்ட நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு, ஆற்றில் அஸ்தியைக் கரைக்க மட்டுமே அனுமதி அளிப்பதாகவும், ஆனால் அஸ்தி கொண்டு வரும் பானைகளையோ அல்லது துணிகளையோ ஆற்றில் வீசக்கூடாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

இனிவரும் காலங்களில் தாமிரபரணி ஆற்றினை மாசுபடுத்துவது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையாகக் கருதப்படும் என பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. மேலும், விதிகளை மீறி ஆற்றை அசுத்தப்படுத்துபவர்களுக்குக் கடுமையான அபராதம் விதிக்கும் வகையில் உள்ளாட்சி அமைப்புகள் உடனடியாகத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும், மாவட்ட ஆட்சியர் மற்றும் உள்ளூர் காவல் துறையினர் இதற்கு உரிய பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in