“நள்ளிரவில் அரங்கேறிய பயங்கரம்..! சுத்தியலை கையில் எடுத்த கணவன்… ரத்த வெள்ளத்தில் சரிந்த மனைவி, பிஞ்சு குழந்தை.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!” – cinefeeds
Connect with us

CRIME

“நள்ளிரவில் அரங்கேறிய பயங்கரம்..! சுத்தியலை கையில் எடுத்த கணவன்… ரத்த வெள்ளத்தில் சரிந்த மனைவி, பிஞ்சு குழந்தை.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!”

Published

on

கர்நாடக மாநிலம் பல்லாரியின் ஆந்திரல் பகுதியில் குடும்பத் தகராறு காரணமாகக் கொடூரமான இரட்டைக் கொலைச் சம்பவம் நடந்துள்ளது. ஹொன்னூரு சுவாமி என்பவருக்கும் அவரது மனைவி ராஜேஸ்வரிக்கும் இடையே கடந்த சில நாட்களாகக் குடும்பச் சண்டை நடந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், வியாழக்கிழமை இரவு இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த ஹொன்னூரு சுவாமி தனது மனைவி ராஜேஸ்வரி மற்றும் அவர்களது 7 மாதப் பெண் குழந்தையான அஸ்பினியைச் சுத்தியலால் கொடூரமாக அடித்துக் கொலை செய்துவிட்டுச் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடியுள்ளார்.

தகவலறிந்து வந்த ஏபிஎம்சி காவல் நிலையப் போலிஸார் சடலங்களைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தக் கொடூரக் கொலைகளுக்கான சரியான காரணம் குறித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள குற்றவாளி ஹொன்னூரு சுவாமியைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுத் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in