LATEST NEWS
“அதிமுகவில் அடுத்தடுத்து விலகல்..! தவெகவின் அசுர வளர்ச்சியால் ஷாக்கான இபிஎஸ் எடுத்த அவசர முடிவு.. தமிழக அரசியலில் திடீர் திருப்பம்..!!
அதிமுகவின் உள்கட்சி நிலவரத்தை சுட்டிக்காட்டி, அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைவது, அதிமுகவின் தற்போதைய தலைமை மீது நிர்வாகிகளுக்கு உள்ள அதிருப்தியையே வெளிப்படுத்துகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தவெகவின் அரசியல் ஆதிக்கத்தையும், தங்களின் சொந்தக் கட்சியில் ஏற்படும் சரிவையும் உடனடியாகத் தடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு அதிமுக தலைமை தள்ளப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், தமிழக அரசியலில் தவெகவின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவும் அதிமுகவின் எதிர்காலப் பாதுகாப்பை உறுதிசெய்யவும் எடப்பாடி பழனிசாமி தீவிர காய்நகர்த்தலில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக அவர் விரைவில் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாஜக தலைமையுடன் இணைந்து செயல்படுவதன் மூலமும், தேசிய அளவிலான ஆதரவைப் பெறுவதன் மூலமும் உள்கட்சிப் பூசல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, அதிமுகவின் செல்வாக்கை மீண்டும் மீட்டெடுக்க அவர் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
