LATEST NEWS
“இதை யாராச்சும் நம்ப முடியுமா..?!” மயங்கி விழுந்த ஆளைக் காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்..! இவருக்கு ஆயுசு கெட்டி தான்..!!
தொழில்நுட்பம் மனிதனின் உயிரைக் காக்க பெரிதும் உதவும் என்பதற்குச் சான்றாக அமெரிக்காவில் ஓர் ஆச்சரியமான சம்பவம் நடந்துள்ளது. முகமது இஸ்லாம் என்பவர் திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாகத் தனது வீட்டிற்கு வெளியே மயங்கி விழுந்துள்ளார். அந்த இக்கட்டான சூழ்நிலையில், அவர் கையில் அணிந்திருந்த ஆப்பிள் வாட்ச் உடனடியாகச் செயல்பட்டு அவசர உதவிக்கான அழைப்பைத் தானாகவே விடுத்துள்ளது.
ஆப்பிள் வாட்ச் அனுப்பிய அந்த அவசர எச்சரிக்கையை அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் மருத்துவக் குழுவினர் அவரை மீட்டுச் சரியான நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். நவீன தொழில்நுட்பத்தின் இந்தச் சரியான நேரத்து உதவியால் முகமது இஸ்லாம் நல்வாய்ப்பாகப் உயிர் தப்பியுள்ளார். “இவருக்கு டைம் உண்மையிலேயே ரொம்ப நல்லாருக்கு” என்று சொல்லும் அளவுக்கு இந்த ஆப்பிள் வாட்ச் சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
