LATEST NEWS
தவெக-வில் விஜய்யிடம் அதிகம் டோஸ் வாங்கியது யார்..? தவெக நிர்வாகி லயோலா மணி ஓப்பனாக உடைத்த அதிரடி உண்மை.. பரபரப்பு பேட்டி..!!
தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்ட நாளிலிருந்தே கட்சியின் உட்கட்சிச் செயல்பாடுகள் மற்றும் நிர்வாகிகள் மீது தலைவர் விஜய் காட்டும் அணுகுமுறை குறித்தப் பல்வேறு சுவாரசியமான தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், கட்சியின் முக்கியப் பேச்சாளரும் நிர்வாகியுமான லயோலா மணி பங்கேற்ற சமீபத்திய நேர்காணல் ஒன்றில், “கட்சி ஆரம்பித்த பிறகு விஜய்யிடம் அதிகமாகத் திட்டு வாங்கியது யார்?” என்ற கேள்விக்குப் பரபரப்பான பதிலை உடைத்துள்ளார். தவெக ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே விஜய்யிடம் அதிகளவில் டோஸ் வாங்கியது வேறு யாரும் இல்லை, தான் தான் என்று வெளிப்படையாக ஒப்புக் கொண்ட அவர், அரசியல் மேடைகளிலும் ஊடக விவாதங்களிலும் பேசும்போது கட்சியின் அதிகாரப்பூர்வக் கொள்கை நிலைப்பாடுகளைத் தாண்டி சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டுப் பேசிவிடுவதே இதற்கு முதன்மையானக் காரணம் என்று விளக்கியுள்ளார்.
பொதுவெளியில் பேசும்போது கண்ணியமும் நிதானமும் மிகவும் முக்கியம் என்பதில் விஜய் கவனமாக இருப்பதாக லயோலா மணி குறிப்பிட்டுள்ளார். கட்சியின் கொள்கைகளுக்கு மாறாகப் பேசினால் உடனடியாகத் தொலைபேசியில் அழைத்து அவர் கண்டிப்பார் எனத் தெரிவித்துள்ளார். புதுமுக நிர்வாகிகள் தவறு செய்யும்போது, அன்பாகத் தவறுகளை உணர்த்தி வழிநடத்துவதே விஜய்யின் பாணி என்றும், இந்த கண்டிப்பும் வழிகாட்டுதலுமே தவெக-வின் கட்டுப்பாட்டிற்கும், அசுர வளர்ச்சிக்கும் முக்கிய காரணம் என்றும் அவர் பகிர்ந்துள்ளார்.
