LATEST NEWS
“ஒரே டெண்டர்… ரூ.187.56 கோடி மிச்சம்..!”தவெக அரசின் அதிரடி கொள்முதலில் தப்பிய அரசு கஜானா.. நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மாஸ் அறிவிப்பு..!!
தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் துவரம் பருப்பைக் குறைந்த விலைக்குக் கொள்முதல் செய்ததன் மூலம், தவெக அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் அரசு கஜானாவிற்கு ரூ.187.56 கோடியை மிச்சப்படுத்தியுள்ளது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் மேற்கொள்ளப்பட்ட தற்போதைய டெண்டர் அடிப்படையில், ஒரு கிலோ துவரம் பருப்பு சராசரியாக ரூ.77.89 என்ற விலைக்குக் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில், பொதுமக்களின் விநியோகத்திற்காக மொத்தம் 60,000 டன் துவரம் பருப்பு இந்த புதிய விலையின்கீழ் வாங்கப்பட்டுள்ளது.
முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.109.15 என்ற விலைக்குக் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது தவெக அரசு கிலோவுக்கு ரூ.31.26 வரை விலையைக் குறைத்துக் கொள்முதல் செய்து சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் துவரம் பருப்பு கொள்முதலுக்கு ரூ.654 கோடி செலவிடப்பட்ட நிலையில், தற்போது வெறும் ரூ.467 கோடியே செலவிடப்பட்டுள்ளது. இவ்வாறு கொள்முதல் விலை கணிசமாகக் குறைக்கப்பட்டிருந்தாலும், ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படும் துவரம் பருப்பின் தரத்தில் எவ்விதக் குறையும் இருக்காது என்று குடிமைப்பொருள் வழங்கல் கழகம் தெளிவுபடுத்தியுள்ளது
