LATEST NEWS
அமைச்சரவையில் அதிரடி மாற்றம்…? உளவுத்துறை கொடுத்த அந்த ‘சீக்ரெட்’ ரிப்போர்ட்.. பறிபோகும் பெண் அமைச்சர் பதவி..!!
இடைத்தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், அடுத்த வாரம் தமிழக அமைச்சரவையில் மாற்றங்களைச் செய்ய முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளதாக நேற்றிரவு புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. உளவுத்துறை அளித்துள்ள ரகசிய அறிக்கை மற்றும் செயல்பாடுகளின் மதிப்பீட்டின் அடிப்படையில், சரியாகச் செயல்படாத அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
முக்கியமாக, சரியாகச் செயல்படாத ஒரு பெண் அமைச்சரின் பதவி பறிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்குப் பதிலாக, இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறும் பட்சத்தில் மரகதம் குமரவேலுக்கு அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
