LATEST NEWS
“உழைச்சது நாங்க… பதவிகள் அவங்களுக்கா..?” இரு பிளவாக உடைந்த தவெக..! அதிமுக வரவுகளால் கிளம்பிய புதிய புயல்..!!
அதிமுகவில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தவர்களுக்கே முக்கிய அரசு பதவிகள் வழங்கப்பட்டு வருவதாகக் கூறி, ரசிகர் மன்றக் காலத்து நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் கு.ப.கிருஷ்ணன் மற்றும் சிங்கை ராமச்சந்திரன் ஆகியோருக்குத் தொடர்ந்து, நாட்டுப்புறக் கலைஞர் புஷ்பவனம் குப்புசாமிக்கும் தவெக சார்பில் அரசு பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இதனால், கட்சியின் ஆரம்பக் கட்டத்தில் இருந்து உழைத்த ரசிகர் மன்றக் கால நிர்வாகிகள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக, அதிமுகவில் இருந்து புதிதாக இணைந்து பதவிகளைப் பெற்றவர்கள் ஒரு தரப்பாகவும், கட்சியின் தொடக்கக் காலத்தில் இருந்து உடன் பயணித்த ரசிகர் மன்ற நிர்வாகிகள் மறுதரப்பாகவும் தவெகவில் பிளவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
