நெஞ்சை பதறவைக்கும் விபரீதம்.. நண்பர்களுடன் வேலை செய்தபோது பாய்ந்த மின்சாரம்… நொடிப் பொழுதில் துடிதுடித்த வாலிபர்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நெஞ்சை பதறவைக்கும் விபரீதம்.. நண்பர்களுடன் வேலை செய்தபோது பாய்ந்த மின்சாரம்… நொடிப் பொழுதில் துடிதுடித்த வாலிபர்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

Published

on

மின்சாரக் கம்பி மூலம் வேலை செய்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக நேர்ந்த விபத்தில், அனுராக் யாதவ் என்ற விக்கி மின்சாரம் பாய்ந்து துடிதுடித்து உயிரிழந்த சோகச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விக்கியும் அவரது நண்பர்களும் சேர்ந்து மின்சாரக் கம்பியை இணைத்து ஒரு வேலையைச் செய்துகொண்டிருந்ததாகத் தெரிகிறது. அச்சமயம் அவர்கள் இருந்த அறை முழுவதும் எதிர்பாராதவிதமாகத் தண்ணீர் தேங்கியிருந்தது இக்கோர விபத்திற்கு வழிவகுத்துள்ளது.

தண்ணீர் தேங்கியிருந்த அந்த அறையில், துரதிர்ஷ்டவசமாக மின்சாரக் கம்பியில் இருந்து கசிந்த மின்சாரம் தண்ணீரில் பாய்ந்துள்ளது. இதில் மின்சார அதிர்ச்சிக்குள்ளான விக்கி, சில நொடிகள் கடுமையான வேதனையில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்தத் துயரச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in