LATEST NEWS
“என் தாலியை கழட்டி எறியுறேன்டா” உன் அப்பா கூட தானடா உனக்கு சண்டை.. அம்மா கூட வந்திருடா.. மகனிடம் கெஞ்சி கதறிய தாய்… மலையிலிருந்து விழுந்து இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில் வெளியான ஷாக் தகவல் ..!
மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள கவத்யா பனிமலைப் பகுதியில் அரங்கேறிய இந்தத் தற்கொலைச் சம்பவத்தின் பின்னணியில், ஒரு தாயின் நெஞ்சை உலுக்கும் பாசப் போராட்டமும், ஒட்டுமொத்தக் குடும்பமும் கண் இமைக்கும் நேரத்தில் பலியான அதிர்ச்சித் தகவல்களும் தற்போது வெளியாகியுள்ளன. 10-ஆம் வகுப்பில் 92 சதவீத மதிப்பெண்கள் பெற்று, மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு 11-ஆம் வகுப்பு படித்து வந்த 16 வயது மாணவன் குணால் சந்த்குடே, தனது தந்தையுடன் ஏற்பட்ட இஎம்ஐ (EMI) மற்றும் பணத் தகராறு காரணமாகக் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தான். இதனால் ஆத்திரமடைந்த அவன், வெள்ளிக்கிழமை மதியம் தனது ஐபோன், கைக்கடிகாரம் மற்றும் வெள்ளிச் சங்கிலியைத் தூக்கி எறிந்துவிட்டு, தற்கொலை செய்து கொள்வதற்காகக் கவத்யா மலையை நோக்கி ஓடியுள்ளான்.
மகன் கோபமாக ஓடுவதைக் கண்டு பதறிய பெற்றோர், அவனைக் காப்பாற்றுவதற்காகப் பின்னாடியே மலை உச்சிக்கு ஓடிச் சென்றுள்ளனர். மலையின் ஆபத்தான விளிம்பில் நின்றுகொண்டு குணால் குதிக்க முயன்றபோது, அவனது தாய் கதறி அழுது, “உனக்கு உன் அப்பாவிடம் தானே சண்டை? இதோ பார், என் தாலியை கழற்றி வீசி விடுகிறேன்; உன் அப்பாவை விட்டுவிட்டு நான் உன்னோடு மட்டும் வருகிறேன், நாம் இருவரும் சேர்ந்து வாழலாம், என்னை விட்டுப் போய்விடாதே மகனே!” என்று தனது திருமண வாழ்க்கையையே தியாகம் செய்யத் துணிந்து பாசப் போராட்டம் நடத்தியுள்ளார்.
இருப்பினும், கோபத்தின் உச்சியில் இருந்த குணால், தாயின் உருக்கமான வேண்டுகோளையும் மீறி சுமார் 200 அடி ஆழமுள்ள அந்தப் பள்ளத்தாக்கில் திடீரெனக் குதித்தான். அவன் காற்றில் குதித்த அந்த நொடியில், அவனைக் எப்படியாவது கையைப் பிடித்துக் காப்பாற்றிவிட வேண்டும் என்ற தவிப்பில், விளிம்பில் நின்ற தாயும் தந்தையும் பதற்றத்துடன் முன்னோக்கிப் பாய்ந்துள்ளனர். ஆனால், எதிர்பாராதவிதமாக அவர்கள் தங்களது உடல் கட்டுப்பாட்டை இழந்ததால், மகனைத் தொடர்ந்து இருவருமே அந்த ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரும் மீட்புக் குழுவினரும், பள்ளத்தாக்கில் இருந்து மூன்று பேரின் உடல்களையும் மீட்டபோது அங்கிருந்த அனைவரின் கண்களும் குளமாயின. ஒரு சாதாரண மொபைல் போன் இஎம்ஐ பிரச்சனையால், ஆசை ஆசையாக வளர்த்த மகனைக் காப்பாற்றச் சென்ற பெற்றோர் உட்பட ஒரு தழிர்த்த குடும்பமே மொத்தமாக அழிந்துபோன இந்தச் சோகச் சம்பவம், தற்போதைய இளம் தலைமுறையினரின் சகிப்புத்தன்மையற்ற போக்கையும், குடும்பங்களுக்குள் இருக்கும் தகவல் பரிமாற்ற இடைவெளியையும் வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது.
