LATEST NEWS
நெஞ்சைப் பதறவைக்கும் விபத்து..! 1 இல்ல 2 இல்ல மொத்தம் 43 குழந்தைகள்… நடுரோட்டில் கொழுந்துவிட்டு எரிந்த பள்ளிப் பேருந்து… டிரைவர் செய்த காரியத்தால் நடந்த அதிசயம்..!!
பஞ்சாப் மாநிலம் பட்டிண்டாவில் உள்ள பிபி வாலா சாலையில், 43 பள்ளி குழந்தைகளுடன் சென்று கொண்டிருந்த தனியார் பள்ளி பேருந்து ஒன்றில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி முடிந்து குழந்தைகளை ஏற்றிக்கொண்டு பேருந்து சென்று கொண்டிருந்த போது, திடீரென இன்ஜினில் இருந்து கரும்புகை கிளம்பி தீப்பற்றி எரியத் தொடங்கியது. பேருந்துக்குள் தீ பரவியதை அடுத்து, உள்ளே இருந்த குழந்தைகள் மரண பயத்தில் அலறியடித்துக் கூச்சலிட்டனர்.
பேருந்தின் கதவு வழியாக குழந்தைகளை உடனடியாக வெளியேற்ற முடியாத இக்கட்டான சூழல் நிலவியுள்ளது. அப்போது பேருந்து ஓட்டுநர் சமயோசிதமாகச் செயல்பட்டு, அருகில் இருந்த பொதுமக்களின் உதவியுடன் பேருந்தின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினார். உடைந்த ஜன்னல் வழியாக ஒவ்வொரு குழந்தையாக பத்திரமாக வெளியே தூக்கி வீசப்பட்டு காப்பாற்றப்பட்டனர். ஓட்டுநரின் இந்தத் துணிச்சலான மற்றும் விரைவான நடவடிக்கையால் பேருந்தில் இருந்த 43 குழந்தைகளும் ஒரு சிறு காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
முதற்கட்ட விசாரணையில், பேருந்தின் மின்சார வயரிங்கில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகவே இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என ஓட்டுநர் தெரிவித்துள்ளார். இருப்பினும், பள்ளி வாகனங்களின் முறையான பராமரிப்பு மற்றும் தகுதிச் சான்றிதழ் குறித்தும், தீயணைப்பு பாதுகாப்பு விதிகள் முறையாகப் பின்பற்றப்பட்டதா என்பது குறித்தும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
