“70 வயசு தாண்டியாச்சா? வீட்டுக்கு போங்க..!” திமுக-வை உலுக்கும் அந்த 13 பேர் கொண்ட மெகா லிஸ்ட்.. அறிவாலயத்தின் அதிரடி உத்தரவு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“70 வயசு தாண்டியாச்சா? வீட்டுக்கு போங்க..!” திமுக-வை உலுக்கும் அந்த 13 பேர் கொண்ட மெகா லிஸ்ட்.. அறிவாலயத்தின் அதிரடி உத்தரவு..!!

Published

on

திமுக செயற்குழு கூட்டத்தில் மாவட்ட செயலாளர்களுக்கு 70 வயது உச்ச வரம்பு என அதிரடி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, கட்சியில் உள்ள 13 முக்கிய மூத்த மாவட்ட செயலாளர்கள் தங்களது பதவிகளை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது. சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிந்தைய சீர்திருத்த நடவடிக்கையாக, மாவட்ட செயலாளராக ஒருவர் அதிகபட்சமாக மூன்று முறை மட்டுமே பதவி வகிக்க முடியும் என்ற புதிய விதியும் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த அதிரடி முடிவுகள் அனைத்தும் அடுத்த 15 நாட்களுக்குள் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வர வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதால், பல தசாப்தங்களாக கட்சியில் கோலோச்சி வந்த மூத்த நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் மத்தியில் இந்த உத்தரவு பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திமுகவில் 70 வயது உச்சவரம்பு மற்றும் 3 முறைக்கு மேல் பதவி வகிக்கக்கூடாது என்ற விதிகளால், 13 முக்கிய மாவட்டச் செயலாளர்கள் பதவியை இழக்கும் அபாயத்தில் உள்ளனர் ற்போது வெளியாகியுள்ள அதிகாரப்பூர்வப் பட்டியலின்படி, ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் ஆர். காந்தி (80 வயது) மற்றும் திருநெல்வேலி மேற்கு மாவட்டச் செயலாளர் ஆவுடையப்பன் (81 வயது) ஆகியோர் அதிகபட்ச வயதினராய் இப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர். இவர்களைத் தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் மூத்த தலைவர்களான திருவண்ணாமலை தெற்கு ஏ.வ.வேலு (75), ஈரோடு தெற்கு முத்துசாமி (77), விருதுநகர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் (77), தூத்துக்குடி தெற்கு அனிதா ராதாகிருஷ்ணன் (74) மற்றும் புதுக்கோட்டை தெற்கு ரகுபதி (76) ஆகியோரின் பதவிகளும் பறிபோகும் சூழல் உருவாகியுள்ளது. மேலும், சுந்தர் (72), செஞ்சி மஸ்தான் (71), எஸ்.ஆர். சிவலிங்கம் (75), சாக்கோட்டை அன்பழகன் (72), கோ. தளபதி (70), மற்றும் ராமகிருஷ்ணன் (77) ஆகியோரும் இந்த 13 பேர் கொண்ட பட்டியலில் இடம்பெற்றுள்ளதால் திமுக உட்கட்சியில் அடுத்த சில நாட்களில் மிகப்பெரிய பவர் மாற்றம் அரங்கேறப் போவது உறுதியாகியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in