“எமனுக்கே டிமிக்கி கொடுத்த பைக் ஓட்டி..” 8 அடி உயரத்திற்கு காற்றில் பறந்த வாலிபர்.. மின் கம்பத்தில் மோதி பைக் தூள் தூளான பிறகும் நடந்த அந்த அதிசயம்.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“எமனுக்கே டிமிக்கி கொடுத்த பைக் ஓட்டி..” 8 அடி உயரத்திற்கு காற்றில் பறந்த வாலிபர்.. மின் கம்பத்தில் மோதி பைக் தூள் தூளான பிறகும் நடந்த அந்த அதிசயம்.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..!!

Published

on

ராஜஸ்தான் மாநிலத்தின் சீகர் சாலையில் அதிவேகமாக வந்த ஸ்பிளெண்டர் பைக் ஓட்டுநர் ஒருவர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் பயங்கரமாக மோதியதில், சுமார் 8 அடி உயரத்திற்கு மேல் காற்றில் தூக்கி வீசப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அதிவேகம் மற்றும் கவனக்குறைவாக பைக் ஓட்டியதே இந்த விபத்துக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. மோதிய வேகத்தில் பைக் தூள் தூளான போதிலும், காற்றில் பறந்து விழுந்த அந்த இளைஞர் எவ்விதப் பெரிய காயங்களுமின்றி அற்புதமாக உயிர் தப்பினார்.

இந்த மிக ஆபத்தான விபத்து மற்றும் இளைஞரின் பொறுப்பற்ற ஓட்டுதல் முறை தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பயங்கரமாக வைரலாகி வருகின்றன. விபத்து நடந்த உடனேயே அங்கிருந்தவர்கள் ஓடிவந்து அந்த இளைஞரை மீட்டனர். அதிவேகமாக வாகனங்களை இயக்குபவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இந்த வீடியோ இணையத்தில் பரவி வரும் நிலையில், உள்ளூர் காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in