“அதிர்ச்சி.. நடைப்பயிற்சி சென்ற 23 வயது பெண்ணுக்கு என்னாச்சு..?” கடற்கரையில் காட்டிய சிக்னல்.. அமெரிக்காவில் மாயமான தெலங்கானா மாணவி.. போலீசாரையே திணறடிக்கும் மர்ம வழக்கு..!! – cinefeeds
Connect with us

CRIME

“அதிர்ச்சி.. நடைப்பயிற்சி சென்ற 23 வயது பெண்ணுக்கு என்னாச்சு..?” கடற்கரையில் காட்டிய சிக்னல்.. அமெரிக்காவில் மாயமான தெலங்கானா மாணவி.. போலீசாரையே திணறடிக்கும் மர்ம வழக்கு..!!

Published

on

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயதான ஸ்ரீஜா என்ற மாணவி, அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளார். உயர்கல்விக்காக ஓராண்டிற்கு முன்பு அமெரிக்கா சென்ற ஸ்ரீஜா, அங்கு படித்துக்கொண்டே பகுதி நேர வேலையும் செய்து வந்துள்ளார். கடந்த நவம்பர் 2ஆம் தேதி மாலை நேரத்தில் வழக்கம் போல நடைப்பயிற்சி சென்றவர், நீண்ட நேரமாகியும் இருப்பிடம் திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த அவரது நண்பர்கள் உள்ளூர் காவல் நிலையத்தில் உடனடியாகப் புகார் அளித்தனர்.

நண்பர்களின் புகாரைத் தொடர்ந்து அமெரிக்க உள்ளூர் காவல்துறையினர் தீவிரத் தேடுதல் வேட்டையில் இறங்கினர். ஸ்ரீஜாவின் கைபேசி இருப்பிடத்தை ஆய்வு செய்தபோது, அது அருகில் உள்ள கடற்கரைப் பகுதியில் காட்டிய நிலையில், அதன் பிறகு அவரது கைபேசி அணைக்கப்பட்டுள்ளது. பல நாட்கள் தேடியும் ஸ்ரீஜா குறித்து இதுவரை எந்தவொரு துப்பும் கிடைக்கவில்லை. தங்களின் ஒரே ஒரு அன்பு மகள் ஒற்றையாகத் தூர தேசத்தில் காணாமல் போனதால், நல்கொண்டாவில் உள்ள அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் பெரும் கவலையிலும் கண்ணீரிலும் ஆழ்ந்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in