அடக்கடவுளே..! “தீபாவளி ஷாப்பிங் போலாமா.” ஏமாற்றி அழைத்து சென்ற கல்லூரி ஆசிரியர்.. வாடகை அறையில் 20 வயது மாணவியுடன்.. கொஞ்ச நேரத்தில் காத்திருந்த அதிர்ச்சி..!! – cinefeeds
Connect with us

CRIME

அடக்கடவுளே..! “தீபாவளி ஷாப்பிங் போலாமா.” ஏமாற்றி அழைத்து சென்ற கல்லூரி ஆசிரியர்.. வாடகை அறையில் 20 வயது மாணவியுடன்.. கொஞ்ச நேரத்தில் காத்திருந்த அதிர்ச்சி..!!

Published

on

வாரணாசியில் உள்ள ஆர்ய கன்யா பட்டப்படிப்பு கல்லூரியில் பணியாற்றும் 40 வயது ஆசிரியர் ஒருவர், அதே கல்லூரியைச் சேர்ந்த 20 வயது மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வியாழக்கிழமையன்று, தீபாவளிப் பண்டிகைக்காகப் பொருட்கள் வாங்கித் தருவதாகக் கூறி அந்த மாணவியை ஆசிரியர் அழைத்துச் சென்றுள்ளார். இருவரும் ஸ்மார்ட் மார்க்கெட் பகுதியில் உடைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கிய பிறகு, உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு, பின்னர் மாணவியை அந்த ஆசிரியர் தனது வாடகை அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு அந்த ஆசிரியர் மாணவியைக் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அந்த மாணவிக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டு, அதிக அளவில் ரத்தப்போக்கு உண்டாகியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியர், மாணவியை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்துள்ளார். மாணவியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததைத் தொடர்ந்து, மருத்துவர்கள் அவரது குடும்பத்தினருக்குத் தகவல் கொடுத்து வரவழைத்துள்ளனர்.

Advertisement

மருத்துவமனைக்கு வந்த மாணவியின் தாயாரிடம், அவர் விபத்தில் சிக்கிக் காயமடைந்ததாகக் கூறி ஆசிரியர் மறைக்க முயன்றுள்ளார். ஆனால், மருத்துவர்கள் நடந்த உண்மைச் சம்பவத்தை அவரிடம் விவரித்துள்ளனர். இதனைத் கேட்டு அதிர்ச்சியடைந்த தாயார் உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் அளித்தார். அதன்பேரில் விரைந்து வந்த சேத்கஞ்ச் போலீசார், குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியரை அதிரடியாகக் கைது செய்தனர். மேலும், உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள அந்த மாணவி மேல்சிகிச்சைக்காக மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in