“மக்களுக்கு 1 ரூபாய் கூட செலவழிக்காத விஜய்..!” மேடையில் ஓபனாக வெளுத்து வாங்கிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்.. பரபரக்கும் அரசியல் களம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“மக்களுக்கு 1 ரூபாய் கூட செலவழிக்காத விஜய்..!” மேடையில் ஓபனாக வெளுத்து வாங்கிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்.. பரபரக்கும் அரசியல் களம்..!!

Published

on

கோடிகளில் சம்பளம் வாங்கிய தவெக தலைவர் விஜய், மக்களுக்காகத் தன் சொந்தப் பணத்திலிருந்து ஒரு ரூபாய் கூட செலவழித்திருக்க மாட்டார் என்று அனிதா ராதாகிருஷ்ணன் கடுமையாகக் விமர்சித்துள்ளார். திமுக கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், தேர்தல் முடிவுகளின் போது பூத் வாரியாக திமுக மற்றும் தவெக பெற்ற வாக்குகளின் பட்டியலைச் சுட்டிக்காட்டித் தனது கருத்துகளைப் பதிவிட்டார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு மக்களுக்கு எவ்வளவோ நலத்திட்டங்களையும் சேவைகளையும் செய்துள்ளது என்று குறிப்பிட்ட அமைச்சர், அப்படிப்பட்ட ஸ்டாலினுக்கு வாக்களிக்காமல், மக்களுக்கு ஒரு ரூபாய் கூடச் செலவழிக்காத விஜய்க்கு வாக்கு அளித்திருக்கிறீர்களே எனத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடம் தனது ஆதங்கத்தையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தினார். அனிதா ராதாகிருஷ்ணனின் இந்தப் பேச்சு தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in