BREAKING: பாஜகவில் இருந்து தேசிய செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூனவாலா திடீர் விலகல்.. சற்றுமுன் பரபரப்பு..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BREAKING: பாஜகவில் இருந்து தேசிய செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூனவாலா திடீர் விலகல்.. சற்றுமுன் பரபரப்பு..!

Published

on

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூனவாலா அக்கட்சியில் இருந்து திடீரென விலகியுள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த இவர், பிரதமர் மோடியின் தீவிர ஆதரவாளராகவும், சமூக வலைத்தளங்களில் காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சிப்பதில் முன்னணி தலைவராகவும் விளங்கி வந்தார். தற்போது அவர் தனது எக்ஸ் பக்கத்தின் பயோவில் (Bio) இருந்து ‘பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர்’ என்ற விபரத்தை நீக்கியதன் மூலம் இந்த விலகல் தகவல் வெளியாகியுள்ளது.

அவர் தனிப்பட்ட காரணங்களுக்காகக் கட்சியில் இருந்து விலகியதாகக் கூறப்பட்டாலும், கட்சிக்குள் நிலவிய அதிருப்தி மற்றும் கருத்து வேறுபாடுகளே இதற்குக் காரணம் என அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் கசிகின்றன. முன்னதாக அவர் வெளியிட்ட வீடியோவில் இளைஞர்களுக்கு பாஜகவே சிறந்த தேர்வு என்று குறிப்பிட்டிருந்தாலும், சமீபகாலமாக அவர் அரசியலில் இருந்து ஒதுங்குவது போன்ற கருத்துக்களைப் பதிவிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in