“நீ அவன் கூட போகாத” சொல்லியும் கேட்காமல் காதலனோடு போன மகள்.. கோபத்தில் தற்கொலை செய்துகொண்ட தாய்… ஈரோட்டில் அதிர்ச்சி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“நீ அவன் கூட போகாத” சொல்லியும் கேட்காமல் காதலனோடு போன மகள்.. கோபத்தில் தற்கொலை செய்துகொண்ட தாய்… ஈரோட்டில் அதிர்ச்சி..!!

Published

on

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே, தனது விருப்பத்திற்கு மாறாக காதலனுடன் திருமணம் செய்து கொள்வதற்காக வீட்டை விட்டு வெளியேறிய மகளை ஏற்க முடியாமல், தாய் கோசலை (45) என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நாகலூர் புதுக்காடு பகுதியைச் சேர்ந்த கோசலையின் மகள் திவ்யா, கதிர்வேல் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், திவ்யா வீட்டை விட்டு வெளியேறி காதலனுடன் சென்றதால் மனமுடைந்த தாய் இந்த துயர முடிவை எடுத்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து கோசலையின் மகன் பிரதீவ்ராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில், தாயைத் தற்கொலைக்குத் தூண்டியதாக மகள் திவ்யா மற்றும் அவரது காதலன் கதிர்வேல் ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in