LATEST NEWS
“எங்களை விட்டுருங்க…” ஈரானிடம் கெஞ்சிய கையோடு… சமாதானப்படுத்த தனி விமானத்தில் $3 பில்லியன் டாலர் மற்றும் 2 டன் தங்கத்தை அனுப்பி வைத்த UAE..!!
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலைத் தொடர்ந்து, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தியது. இதில் அபுதாபி, துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு அமீரகப் பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில், அமெரிக்கா ஆயுதத் தட்டுப்பாடு காரணமாகத் தாக்குதலை நிறுத்தியுள்ளது. இதனால் அச்சமடைந்த ஐக்கிய அரபு அமீரகம், மேலதிக மோதல்கள் ஏற்பட்டால் தங்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என ஈரானிடம் கேட்டுக்கொண்டுள்ளதுடன், அந்நாட்டு வங்கிகளில் முடக்கி வைக்கப்பட்டிருந்த ஈரானுக்குச் சொந்தமான 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மற்றும் 2 டன் தங்கத்தைத் தனி விமானங்கள் மூலம் டெஹ்ரானுக்கு நேரடியாக அனுப்பி வைத்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலால் ஈரானில் சுமார் 30 பயணிகள் விமானங்கள் சேதமடைந்ததால், அங்குப் பயணிகள் விமானச் சேவையை மீண்டும் தொடங்க ஐக்கிய அரபு அமீரகம் உதவி செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஈரான் விமான நிறுவனத்திற்கு 15 பயன்படுத்தப்பட்ட போயிங் மற்றும் ஏர்பஸ் விமானங்களை விற்பனை செய்ய அமீரகம் அனுமதி அளித்து, ஏற்கனவே சில விமானங்களை ஒப்படைத்துள்ளது. மேலும் 14 விமானங்களைக் கொடுக்க முடிவு செய்துள்ள அமீரகம், அமெரிக்கா-ஈரான் மோதலில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவே ஈரானின் முடக்கப்பட்ட சொத்துக்களையும் உதவியையும் திரும்ப வழங்கி வருகிறது.
அதேவேளையில், ஈரானுடனான இந்தப் போரின் போது அமெரிக்கா தனது மொத்த ‘MQ-9 ரீப்பர்’ ஆளில்லா விமானங்களில் கால் பங்கான, குறைந்தது 45 ட்ரோன்களை இழந்துள்ளதாகவும், இதனால் அமெரிக்காவிற்கு 1.3 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது. போரின் தொடக்கத்தில் அமெரிக்காவிடம் 185 ரீப்பர் ட்ரோன்கள் இருந்த நிலையில், உபகரணங்களுடன் சேர்த்து தலா 30 முதல் 50 மில்லியன் டாலர் மதிப்புள்ள இந்த ட்ரோன்களின் இழப்பும், ஏவுகணை கையிருப்புத் தீர்ந்துபோனதும் அமெரிக்காவிற்குப் பெரும் ஆயுதத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது.
