LATEST NEWS
“எம்.எல்.ஏ சரவணனைக் காப்பாற்றுகிறாரா அமைச்சர் ஆனந்த்..?” அவர் நிரபராதியா..? பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் பரபரப்பு புகார்..!!
தூத்துக்குடியில் தமிழக வெற்றி கழக பெண் நிர்வாகி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில், சட்டமன்ற உறுப்பினர் சரவணன் மீது எந்தத் தவறும் இல்லை என அமைச்சர் ஆனந்த் சட்டப்பேரவையில் தெரிவித்தார். இந்த வழக்கில் ஏற்கனவே இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், காவல்துறையின் புலன் விசாரணையில் எம்.எல்.ஏ சரவணனுக்கு இந்தச் சம்பவத்தில் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பது தெரியவந்துள்ளதாக அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.
அமைச்சரின் இந்த அறிவிப்புக்குத் தற்பொழுது பாதிக்கப்பட்ட பெண் கடும் எதிர்ப்பு தெரிவித்துக் கேள்வி எழுப்பியுள்ளார். தான் அளித்த புகார் மனு தொடர்பாகத் தன்னிடம் இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ புலன் விசாரணையும் நடத்தப்படாத நிலையில், எந்த அடிப்படையில் எம்.எல்.ஏ சரவணன் நிரபராதி என அமைச்சர் கூறுகிறார் என்று அவர் சாடியுள்ளார். மேலும், குற்றச்சாட்டுக்கு உள்ளான சட்டமன்ற உறுப்பினரைக் காப்பாற்றும் நோக்கில் அமைச்சர் ஆனந்த் ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியிருப்பது தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
