“திமுகவின் அடுத்த விக்கெட் காலி..?” காரில் கொடி இல்லை… நிர்வாகிகளிடம் மௌனம்… தலைமையை அலறவிடும் அனிதா ராதாகிருஷ்ணனின் அந்த சைலன்ட் மூவ்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“திமுகவின் அடுத்த விக்கெட் காலி..?” காரில் கொடி இல்லை… நிர்வாகிகளிடம் மௌனம்… தலைமையை அலறவிடும் அனிதா ராதாகிருஷ்ணனின் அந்த சைலன்ட் மூவ்..!!

Published

on

திமுகவின் தீவிர தலைவர்களில் ஒருவரான அனிதா ராதாகிருஷ்ணன், கடந்த இரண்டு மாதங்களாகக் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் தொடர்ந்து விலகியிருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில், சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு அறிவதற்காகத் தூத்துக்குடி நீதிமன்றத்திற்கு வருகை தந்தபோது, வழக்கமாக அவரது காரில் பறக்கும் திமுக கொடி அகற்றப்பட்டிருந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

மேலும், அங்கு திரண்டிருந்த கட்சி நிர்வாகிகளிடம் கூட அவர் எவ்வித உரையாடலும் இன்றி முகத்தைக் காட்டிப் பேசாமல் சென்றது, கட்சித் தலைமையுடனான அவரது விரிசலை வெளிப்படையாக உணர்த்தும் வகையில் அமைந்தது. நீண்டகாலமாக நிலவிவரும் உட்கட்சி மோதல்கள் மற்றும் சமீபத்திய அரசியல் நகர்வுகள் காரணமாக, அவர் தனது கட்சி விலகலை உறுதியாக்கியுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

இதன் தொடர்ச்சியாக, இன்னும் ஓரிரு வாரங்களில் அனிதா ராதாகிருஷ்ணன் தனது கட்சிப் பொறுப்புகளை அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த திடீர் முடிவு, தூத்துக்குடி மாவட்ட திமுக வட்டாரத்திலும், ஒட்டுமொத்த தென் தமிழக அரசியலிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in