LATEST NEWS
அடக் கொடுமையே..! தீபாவளி இனிப்பில் இவ்வளவு பெரிய மோசடியா..?! பால்கோவா, ரசகுல்லாவில் கலப்படம்… விடிய விடிய நடந்த Raid… ரகசிய கிடங்கில் புகுந்து சீல் வைத்த அதிகாரிகள்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, கலப்பட இனிப்புகள் விற்பனையாவதைத் தடுக்கும் வகையில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில் தகியா பகுதியில் நடைபெற்ற திடீர் சோதனையின் போது, சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட சுமார் 350 கிலோ சந்தேகத்திற்குரிய ரசகுல்லாக்கள் பறிமுதல் செய்யப்பட்டு, உடனடியாக அழிக்கப்பட்டன.
மேலும், சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த இரண்டு பெரிய கிடங்குகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்தக் கிடங்குகளில் ரசகுல்லா மற்றும் பால்கோவா போன்ற இனிப்புகள் பெருமளவில் தயாரிக்கப்பட்டு, சுற்றியுள்ள உள்ளூர் கடைகளுக்கு விநியோகம் செய்யப்பட இருந்தது தெரியவந்துள்ளது.
கைப்பற்றப்பட்ட இனிப்புகளின் மாதிரிகளை உணவுப் பாதுகாப்புத் துறையினர் ஆய்வகச் சோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆய்வக அறிக்கை வெளிவந்த பிறகு, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்படி கடுமையான தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
