“அனுபவம் இல்லை.. ஆனா சம்பவம் இருக்கு..!” தலைமைச் செயலகத்தில் கொடியேற்றும் முதல்வர் விஜய்க்கு… தமிழ் அகராதியைத் தோண்டித் துருவி வாழ்த்திய நடிகர் பார்த்திபன்..!! – cinefeeds
Connect with us

CINEMA

“அனுபவம் இல்லை.. ஆனா சம்பவம் இருக்கு..!” தலைமைச் செயலகத்தில் கொடியேற்றும் முதல்வர் விஜய்க்கு… தமிழ் அகராதியைத் தோண்டித் துருவி வாழ்த்திய நடிகர் பார்த்திபன்..!!

Published

on

தமிழக முதலமைச்சராக விஜய் வருகிற சுதந்திர தினத்தையொட்டி சென்னை தலைமை செயலகம் கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடி ஏற்றுகிறார். இதையொட்டி அவருக்கு நடிகர் பார்த்திபன் அவருக்கே உரிய தனித்துவமான வார்த்தை ஜாலத்துடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘வெற்றிக் கொடி கட்டு’ படத்தில் நடித்த நான், அரசியலில் வெற்றிக் கொடி கட்டிய தமிழக வெற்றிக் கழக தலைவர், மாநில முதல்வராக சுதந்திர தினத்தன்று மூவர்ண கொடியை ஏற்றுவதைப் பற்றி கவிதை இயற்றுவதா? அட கவிதையாக இல்லாவிட்டாலும் உரைநடையாவது… யோசித்தபடி….. தமிழ் அகராதியில் வார்த்தைகளை யாசித்தபடி…… கொடி காத்த குமரன் முதற்கொண்டு எண்ணற்ற தியாகிகள் பெற்று தந்த சுதந்திரத்தை மதிப்புடன் மடித்து கட்டிக் காத்த சுதந்திர கொடியை ஆக 15-ல் பட்டொளி வீசி பறக்கவிடும் பெருமையை நமது முதல்வர் முதன்முறை பெறுகிறார். தமிழ்தாய் வாழ்த்து தான் விழாக்களின் தொடக்கமாக பாடப்பட வேண்டுமென சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியவர்.

Advertisement

அனுபவம் இல்லாவிட்டாலும் மக்களுக்கான சம்பவம் செய்ய அரசியலுக்கு வந்து வெற்றிக் கொடி நாட்டலாம் என்ற நம்பிக்கையை நம் நாட்டு இளைஞர்கள் மனதில் ஏற்றியவர், ஆட்சி முறை பெற பணம் தேவையில்லை, மக்களின் நன்மதிப்பை மட்டும் கவனமாக நம் பக்கம் திருப்பினாலே வெற்றி தான் என்ற சூத்திரத்தை அரசியல்வாதிகளுக்கே ஏற்றியவர். அரசு ஊழியர்கள் நேரத்தோடு வேலைக்கு வந்து நேர்மையோடு வேலை செய்ய வேண்டும் என்பதற்காக தானே முன் உதாரணத்தை ஏற்றியவர். விவசாயிகளுக்கான சிறப்பு ஊக்கத்தொகையை வரலாறு காணாத அளவு ஏற்றியவர். லஞ்சம் வாங்க இதயத்தில் பயத்தை கொஞ்சமாக ஏற்றியவர். ஆக இன்னும் பல நன்றை ஏற்றியவர் என்ற தகுதியுடன் ஆகஸ்டு 15-ல் சுதந்திரக் கொடியை ஏற்றுகிறார் நமது முதலமைச்சர் பெருமையுடன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in