CINEMA
“ஐயோ தல.. பார்த்து.. கார் ரேஸில் அஜித்துக்கு விபத்து..!” கட்டுப்பாட்டை இழந்த அதிவேக கார்… நடந்தது என்ன..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!
ஐரோப்பாவில் நடைபெற்று வரும் மதிப்புமிக்க மிச்செலின் லீ மேன்ஸ் கோப்பை கார் ரேஸ் போட்டியில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் கார் பந்தய வீரருமான அஜித்குமார் ஓட்டிச் சென்ற ரேஸ் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கார் பந்தய களத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ‘கம்பேக்’ கொடுத்துள்ள அஜித், இந்த பந்தயத்தில் அதிவேகமாக காரைச் செலுத்தியபோது எதிர்பாராதவிதமாக அவரது கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த அடுத்த கணமே அங்கிருந்த மீட்புக்குழுவினர் மற்றும் மருத்துவக் குழுவினர் அஜித்குமாரை அதிரடியாக மீட்டுப் பரிசோதனைக்கு உட்படுத்தினர்.
தீவிர மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு, நடிகர் அஜித்குமார் எவ்விதக் காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவரது ஒட்டுமொத்த ரசிகர்களும் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். அஜித் விபத்தில் சிக்கிய செய்தி சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவியதைத் தொடர்ந்து, உலகெங்கிலும் உள்ள அவரது லட்சக்கணக்கான ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்தனர். தற்போது அவர் நலமாக இருக்கிறார் என்ற அதிகாரப்பூர்வத் தகவல் வெளியான போதிலும், சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் ‘பார்த்து தல’, ‘உடம்பைப் பாத்துக்கோங்க தல’ என்று மிகுந்த பாசத்துடனும் அக்கறையுடனும் அஜித்திற்குத் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
