LATEST NEWS
“நாங்க வேண்டுமா, அதிகாரிகள் வேண்டுமா..?” கம்யூனிஸ்டுகளைத் தொடர்ந்து முதல்வர் விஜயைக்கு எச்சரிக்கை விடுத்த விசிக.. தவெக கூட்டணிக்குள் வெடித்த மெகா பூசல்..!!
தமிழக வெற்றிக் கழகம் அரசு வெளியிட்டுள்ள கல்லூரி சுற்றறிக்கை விவகாரம், அதன் கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கடும் மோதலை உருவாக்கியுள்ள நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனும் இந்த விவகாரத்தில் தவெக அரசுக்கு அதிரடி எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். “தவெக அரசு அமைய ஆதரவு தந்த நாங்கள் வேண்டுமா, அல்லது தன்னிச்சையாகச் செயல்படும் அதிகாரிகள் வேண்டுமா?” என முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு CPM மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் விடுத்த காரசாரமான கேள்வியைச் சுட்டிக்காட்டி திருமாவளவன் பேசியுள்ளார். தவெக அரசு தங்களது தோழமைக் கட்சிகளுடன் கொண்டுள்ள அரசியல் உறவு எந்தவொரு சூழ்நிலையிலும் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்றும், இந்த விவகாரத்தை முதலமைச்சர் விஜய் தனிப்பட்ட முறையில் உடனடியாகக் கவனத்தில் கொண்டு சரிசெய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கல்லூரி சுற்றறிக்கை விவகாரத்தில் கம்யூனிஸ்டுகளைத் தொடர்ந்து விசிக-வும் தவெக அரசுக்கு எதிராகத் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியிருப்பது, தவெக கூட்டணிக்குள் எழுந்துள்ள உச்சகட்ட உட்கட்சிப் பூசலையே காட்டுவதாக அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தவெக 2026 சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து ஆட்சியைப் பிடித்திருந்தாலும், சட்டமன்றத்தில் இந்த அரசு நீடிப்பதற்குக் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவே முட்டுக்கொடுத்து வருகிறது. இத்தகைய இக்கட்டான அரசியல் சூழலில், அதிகாரிகளின் தன்னிச்சையான செயல்பாடுகளால் கூட்டணிக் கட்சிகள் ஒவ்வொன்றாகத் தவெக அரசுக்கு எதிராகத் திரும்பி வருவது, முதலமைச்சர் விஜய்யின் ஆட்சித் தலைமைக்கு வந்துள்ள மிகப்பெரிய முதல் அரசியல் நெருக்கடியாகப் பார்க்கப்படுகிறது
