LATEST NEWS
சட்டமன்றத்துல ஒரே அழுகை அழுறாரு.. திமுகவை அழிச்சிடுவாங்களோன்னு பயம் வந்துட்டு… உதயநிதியை வம்பிக்குழுத்த அமைச்சர் கீர்த்தனா..!!
சிவகாசியில் நடைபெற்ற தவெக 100 நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் அமைச்சர் கீர்த்தனா கலந்துகொண்டு ஆளுங்கட்சியான திமுகவை கடுமையாக விமர்சித்துப் பேசினார். சட்டமன்ற நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்பக்கூடாது என்று ஒருவர் தொடர்ந்து புலம்பி வருவதாக அவர் தனது உரையில் சாடினார்.
சட்டமன்றத்தில் பேசப்படும் சில வார்த்தைகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்கிவிடுவதாகக் கூறினாலும், அதற்கு முன்பாகவே மக்கள் அந்த வீடியோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் ‘ரீல்ஸ்’ போட்டு வைரலாக்கி விடுவதாக அவர் குறிப்பிட்டார். இதனால் ஆளுங்கட்சியினர் என்ன செய்வது என்று தெரியாமல் ‘ஃபயர்’ விட்டு அழுது கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர் விமர்சித்தார்.
திமுகவினர் தற்போது பெரும் பயத்தில் இருப்பதாகக் குறிப்பிட்ட கீர்த்தனா, தவெகவின் வளர்ச்சியைக் கண்டு தங்களின் மொத்தக் கட்சியையும் சேர்த்து அழித்துவிடுவார்களோ என்ற அச்சம் தற்போதைய ஆளுங்கட்சிக்கு வந்துவிட்டதாக சிவகாசி பொதுக்கூட்டத்தில் காரசாரமாகப் பேசினார்.
