prepare well next time. Try to do better… பிரிண்ட் அவுட் எடுத்துட்டு வந்து படிக்காதீங்க.. CM விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

prepare well next time. Try to do better… பிரிண்ட் அவுட் எடுத்துட்டு வந்து படிக்காதீங்க.. CM விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்..!!

Published

on

சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் விஜய் ஆற்றிய உரைக்கு, திமுக இளைஞரணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தனது கடுமையான கண்டனத்தையும் விமர்சனத்தையும் பதிவு செய்துள்ளார். முதலமைச்சரின் உரையானது மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் இல்லாமல், வெறும் சினிமா பாணியில் அமைந்திருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முதலமைச்சரின் உரை குறித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள உதயநிதி, அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுகளை வெறும் பிரிண்ட் அவுட் எடுத்து வந்து சபையில் படிப்பதற்கு எதற்காக மூன்று நாட்கள் அவகாசம் தேவைப்பட்டது என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், விஜய் ஆற்றிய உரை எந்தவொரு முறையான விளக்கமும் இல்லாத “பதிலற்ற பதிலுரை” என்றும், தன் மீதான குற்றச்சாட்டுகளை திசைதிருப்ப மற்றவர்கள் மீது பழிபோடும் வீண் பேச்சு என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

Advertisement

சட்டப்பேரவை விவாதங்களை எதிர்கொள்ளாமல் முதலமைச்சர் செயல்படுவதாகக் குறிப்பிட்ட உதயநிதி, “எந்தவித தயாரிப்பும் இன்றி ‘ரோல் கேமரா, ஆக்ஷன்’ முறையில் முதலமைச்சர் கிரிஞ்ச் டயலாக் பேசியுள்ளார்” என சாடியுள்ளார். எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் ஓடி ஒளிய வேண்டாம் என்றும், அடுத்த முறை சட்டப்பேரவைக்கு வரும்போது நன்கு தயாரிப்புடன் வந்து prepare well next time. Try to do better என்றும் முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in