LATEST NEWS
“ஆதாரங்களை ஒவ்வொன்றாக வெளியிடுவேன்” விஜய் நண்பர் விஷ்ணு ரெட்டி, அவர் மச்சான் சுஜய் ரெட்டி இவங்க எல்லாம்… உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேட்டி..!!
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் ஆலோசகர்கள் மீது மிகக் கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அரசு நடத்தும் கனிமவளச் சுரங்கங்கள் அனைத்தும் முதலமைச்சரின் நண்பர்களின் முழு கட்டுப்பாட்டில் சட்டவிரோதமாக இயங்கி வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய உதயநிதி ஸ்டாலின், முதல்வர் விஜய்யின் நண்பரும் தவெகவின் முக்கிய ஆலோசகருமான விஷ்ணு ரெட்டி, அவருடைய மச்சான் சுஜய் ரெட்டி மற்றும் தொழில் கூட்டாளி அனில் ரெட்டி ஆகியோர் இதில் சம்பந்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து அரசுக்குச் சொந்தமான சுரங்கத் தொழில்களைத் தங்களது முழுக் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளதாக அவர் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
இந்த சட்டவிரோத ஆதிக்க நடவடிக்கைகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் மிக விரைவில் ஒவ்வொன்றாகப் பொதுவெளியில் வெளியிடப் போவதாக உதயநிதி ஸ்டாலின் எச்சரித்துள்ளார். சட்டப்பேரவை வெளிநடப்புக்குப் பிறகு நடந்த இந்த செய்தியாளர் சந்திப்பு மற்றும் அவரது இத்தகைய அனல் பறக்கும் குற்றச்சாட்டு தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
