LATEST NEWS
“எங்களை அடச்சி வச்சி மிரட்டினாங்க” அது யார்..? என வெளியே சொன்னால்… மே 8-ல் ஹோட்டலில் நடந்த ரகசியங்கள்… திமுகவை அதிரவைத்த அமைச்சர் ஷாஜகான்..!!
சட்டப்பேரவையில் ஆளும் தவெக அரசைச் சேர்ந்த அமைச்சர் ஷாஜகான் பேசியுள்ள அதிரடியான கருத்துகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன. தமிழ்நாட்டில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுவிடக் கூடாது என்ற ஒரே முக்கிய காரணத்திற்காகவே, தாங்கள் தவெக அரசுக்கு முழு ஆதரவு அளித்ததாக அவர் சட்டமன்றத்தில் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
விஜய் தலைமையில் புதிய ஆட்சி அமைந்துவிடக் கூடாது என்பதில் திமுக தலைமை மிகவும் உறுதியாக ஒரு முடிவை எடுத்திருந்ததாக அமைச்சர் ஷாஜகான் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், திமுகவின் அந்த ரகசிய முடிவை தங்களது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஏற்க மறுத்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அரசியல் கண்ணியத்தைக் காக்க வேண்டியிருப்பதால் சில ரகசியங்களை இப்போது தம்மால் பொதுவெளியில் சொல்ல முடியவில்லை என்றும் அவர் கூறினார்.
கடந்த மே 8 ஆம் தேதி இரவன்று IUML கட்சியின் இரண்டு எம்.எல்.ஏ.க்களை ஒரு ஹோட்டலில் சட்டவிரோதமாக அடைத்து வைத்து மிரட்டியது யார் என்ற உண்மையை அம்பலப்படுத்த வேண்டிய கட்டாயம் தமக்கு வந்துவிடும் என அமைச்சர் எச்சரித்துள்ளார். தவெக அரசுக்கு ஆதரவு அளிக்கக் கூடாது என்பதற்காக நடத்தப்பட்ட இந்த மிரட்டல் சம்பவத்தின் பின்னணியைச் சுட்டிக்காட்டி அமைச்சர் ஆற்றிய உரை பேரவையில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
