LATEST NEWS
சூரியனுக்குச் சூடு வைத்த சூராதி சூரரே.. அப்பாவின் அட்ராசிட்டிகளை அடக்கி அரியணை ஏறிய அரிமாவே… தவெக எம்.எல்.ஏ-வின் மாஸ் டயலாக்… சட்டசபையில் சிரித்த முதலமைச்சர் விஜய்…!!
தமிழக சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ கார்த்திகேயன் ஆற்றிய அடுக்குமொழிப் பேச்சைக் கேட்டு முதலமைச்சர் விஜய் சிரித்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பேரவை விவாதத்தின் போது பேசிய எம்.எல்.ஏ கார்த்திகேயன், எதிர்க்கட்சியான திமுகவை மறைமுகமாகக் குறிப்பிடும் வகையில் அனல் பறக்கும் வசனங்களைப் பேசினார்.
அவர் தனது உரையில், “தமிழகத்தைச் சுரண்டி சுட்டெரித்த சூரியனுக்குச் சூடு வைத்த சூராதி சூரரே… அப்பாவின் அட்ராசிட்டிகளை அடக்கி அரியணை ஏறிய அரிமாவே…” என முதலமைச்சர் விஜய்யைப் புகழ்ந்து தள்ளினார். தவெக எம்.எல்.ஏ-வின் இந்த சினிமா பாணி மாஸ் டயலாக்குகளையும், அவரது அடுக்குமொழிப் புகழ்ச்சியையும் கேட்டு மேடையில் அமர்ந்திருந்த முதலமைச்சர் விஜய் முகத்தில் புன்னகை அரும்பியது.
