LATEST NEWS
சட்டப்பேரவையில் திமுகவின் ஊழலை வெளுத்து வாங்கிய விஜய்… “இதுதான் தமிழக அரசியலின் புதிய விடியல்…” என பகிரங்கமாக ஆதரவு தெரிவித்த பிரவீன் சக்ரவர்த்தி MP..! தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்..!!
தமிழகச் சட்டப்பேரவையில் திமுக அரசைக் கடுமையாக விமர்சித்துப் பேசிய CM விஜய்யின் உரையைப் பிரவீன் சக்ரவர்த்தி வெகுவாகப் பாராட்டியுள்ளார். திமுக அரசு பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டு வருவதாகவும், மூத்த அரசியல்வாதிகள் என்ற போர்வையில் எதிர்க்கட்சியினரையும் பிறரையும் ஆபாசமாகவும் கீழ்த்தரமாகவும் பேசுவதை அவர்கள் இயல்பான ஒன்றாகவே கருதுவதாகவும் விஜய் சட்டப்பேரவையில் ஆவேசமாகக் குற்றம்சாட்டினார்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம்பெற்றிருக்கும் நிலையிலும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பிரவீன் சக்ரவர்த்தி தனது X பக்கத்தில் விஜய்யின் இந்த பேச்சை வெகுவாக ஆதரித்துப் பதிவிட்டுள்ளார். தமிழக அரசியலில் பல தசாப்தங்களாக ஆழமாக வேரூன்றியிருக்கும் ஊழலையும், ரௌடிசத்தையும் ஒழித்தெறியும் இந்த அறப்போராட்டத்தின் புதிய ‘விடியல்’ தான் விஜய்யின் இந்த ஆவேசப் பேச்சு என அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
