LATEST NEWS
“இப்படிப்பட்டவங்களை எல்லாம் உடன் வச்சுக்கிட்டு பேச என்ன தகுதி இருக்கு..?” தவெக அமைச்சர்களின் ED வழக்குகளை அப்பட்டமாகத் தோலுரித்த உதயநிதி.. அதிரும் கோட்டை..!!
தமிழகச் சட்டமன்றப் பேரவைக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் விஜய் மீது அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து மிகக் காரசாரமாகப் பேசியுள்ளார். ரூ.15 கோடி சம்பளத்தை மறைத்ததாக தற்போதைய முதலமைச்சர் விஜய் மீதுதான் வருமான வரித் துறை வழக்கு நிலுவையில் இருக்கிறது. ஆனால், திமுகவைச் சார்ந்தவர்கள் யாரும் இதுவரை எந்தவொரு ஊழல் குற்றச்சாட்டிலும் நீதிமன்றத்தால் தண்டனை பெறவில்லை என்று மிகக் கடுமையான வார்த்தைகளால் அவர் முதலமைச்சரைச் சாடியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், பொதுப்பணித் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் கே.பி.அன்பழகன் ஆகியோர் மீது அமலாக்கத் துறை வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று தவெக அமைச்சரவையில் உள்ளவர்களின் பின்னணியை உதயநிதி ஸ்டாலின் மிகக் காரசாரமாகத் தோலுரித்துள்ளார். இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகள் கொண்டவர்களை எல்லாம் தங்களின் பக்கத்தில் உடன் வைத்துக்கொண்டு, எங்களைப் பற்றிப் பேச இவருக்கு என்ன தகுதி இருக்கிறது?” என்று தவெக அரசு மற்றும் முதலமைச்சரின் தார்மீகத் தகுதியை அவர் அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து மேய்ந்துள்ளார்.
