“ஆஹா.. செம லக்..! நண்பர் கொடுத்த பிறந்தநாள் லாட்டரி டிக்கெட்… ரூ.83,000-னு நினைச்சு கிளைம் பண்ண போனவருக்கு காத்திருந்த 8.3 கோடி ஜேக்பாட் ட்விஸ்ட்..!!” – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஆஹா.. செம லக்..! நண்பர் கொடுத்த பிறந்தநாள் லாட்டரி டிக்கெட்… ரூ.83,000-னு நினைச்சு கிளைம் பண்ண போனவருக்கு காத்திருந்த 8.3 கோடி ஜேக்பாட் ட்விஸ்ட்..!!”

Published

on

அமெரிக்காவின் இலினாய் மாநிலத்தின் பிராட்வுட் பகுதியைச் சேர்ந்த நபருக்கு, அவரது பிறந்தநாளுக்காக மனைவியால் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்தின் போது, நண்பர் ஒருவர் பரிசு உறை ஒன்றை வழங்கினார். அதில் சில லாட்டரி சீட்டுகள் இருந்தன. அதனை ஒரு சாதாரண பரிசாகக் கருதி அந்த நபர் வாங்கிக் கொண்டார். அப்போது அந்தச் சிறிய உறைக்குள் பல கோடிகள் ஒளிந்திருப்பது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.

சில நாட்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் 8 அன்று வெளியான ‘இலினாய் லாட்டரி மில்லியன் 2’ முடிவுகளை சரிபார்த்த போது, அவரது சீட்டில் இருந்த 11, 17, 22, 26, 36 மற்றும் 45 ஆகிய அனைத்து 6 எண்களும் வெற்றியாளரின் எண்களுடன் அப்படியே ஒத்துப்போயின. ஆனால், அவரும் அவரது நண்பரும் தங்களுக்கு 1,000 டாலர் பரிசு கிடைத்திருப்பதாகத் தவறாக நினைத்துக்கொண்டனர்.

Advertisement

அதன்பின்னர், மனைவியுடன் லாட்டரி பெறச் சென்ற இடத்தில் அதிகாரி டிக்கெட்டை ஸ்கேன் செய்து பார்த்துவிட்டு சிரித்தபடி, இது 1,000 டாலர் பரிசு அல்ல, மாறாக 1 மில்லியன் டாலர் ஜேக்பாட் பரிசு எனத் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் அடைந்த தம்பதியினர், இந்த தொகையைக் கொண்டு தங்கள் 40வது திருமண நாளைக் கொண்டாட சொகுசுக் கப்பல் பயணம் மேற்கொள்ளவும், புதிய கார் வாங்கவும், குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாகச் செலவிடவும் திட்டமிட்டுள்ளனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in