CINEMA
‘புக் மை ஷோ’ கொடுத்த மரண மாஸ் ஹிண்ட்! ஜூன் 22ல் ரசிகர்களுக்கு காத்திருக்கும் விஜய்யின் பிறந்தநாள் ட்ரீட்…!”நான் பண்ணலப்பா..” – ‘ஜனநாயகன்’ லீக் விவகாரத்தில் எடிட்டருக்கு விழுந்த அதிரடி சாட்டையடி…!
விஜய் – ஹெச். வினோத் கூட்டணியில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை எப்போது திரையில் காண்போம் என்று ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். விஜய் தற்போது தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளதால், இனி அவரை வெள்ளித்திரையில் பார்ப்பது அரிதான ஒன்று எனக் கருதப்படுகிறது. இதனால் அவரது கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ மீதான எதிர்பார்ப்பு முன்னெப்போதையும் விட பல மடங்கு அதிகரித்துள்ளது. முதலில் ஜனவரி மாதமே வெளியாக வேண்டிய இப்படம், சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் தள்ளிப்போனது. நீதிமன்றம் வரை சென்ற தயாரிப்பு நிறுவனம், பின்னர் வழக்கை வாபஸ் பெற்று மறு தணிக்கைக்கு படத்தை அனுப்பிய நிலையிலும், சென்சார் அதிகாரிகள் படத்தை பார்க்காமல் இழுத்தடித்து வந்தனர்.
இப்படிப்பட்ட சூழலில், சில மாதங்களுக்கு முன்பு ஒட்டுமொத்தத் திரைத்துறையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் விதமாக, இப்படத்தின் முழு நீளப் படமும் இணையத்தில் லீக்கானது. இந்த படுபாதக செயலை யார் செய்தது எனத் தீவிரமாகத் தேடியதில், படத்தின் எடிட்டரின் உதவியாளர் மூலமாகவே படம் கசிந்தது கண்டுபிடிக்கப்பட்டு, சிலர் கைதும் செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் படத்தின் எடிட்டருக்கு நேரடித் தொடர்பு இல்லை என்றாலும், சங்கத்தில் இல்லாத ஒருவரைத் தனது உதவியாளராக வைத்து அலட்சியமாகச் செயல்பட்ட காரணத்திற்காக, அவர் தென்னிந்திய எடிட்டர்கள் சங்கத்திலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.
இத்தனைப் பலகட்டப் பிரச்சனைகளையும், தடைகளையும் தாண்டிய ‘ஜனநாயகன்’ திரைப்படம் எப்போது வெளியாகும் என்ற கேள்விக்கு தற்போது ஒரு சுமுகமான விடை கிடைத்துள்ளது. விஜய் இப்போது முதலமைச்சராகிவிட்டதால், படத்தின் ரிலீஸிற்கு இனி எந்தப் பிராந்திய அரசியல் முட்டுக்கட்டைகளும் இருக்காது என்று சினிமா வட்டாரங்கள் கருதுகின்றன. மேலும், படத்தின் தயாரிப்பாளர் சமீபத்தில் திருச்செந்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மிக விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று உறுதியளித்திருந்தார்.
இந்நிலையில், ரசிகர்களைக் கொண்டாட்டத்தில் ஆழ்த்தும் விதமாக ‘ஜனநாயகன்’ படத்தின் ரிலீஸ் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. டிக்கெட் முன்பதிவு செய்யும் பிரபல தளமான ‘புக் மை ஷோ’-வில் (BookMyShow), வரும் ஜூன் 22ஆம் தேதி முதல் ‘ஜனநாயகன்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அன்றைய தினம் விஜய்யின் பிறந்தநாள் என்பதால், அவரது ரசிகர்களுக்கு மாபெரும் பிறந்தநாள் பரிசாக (Birthday Treat) அன்றைய தினமே படத்தை உலகமெங்கும் ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
