கனவுகளோடு வந்த கணவர்…! “ஆசையாய் வாங்கிய பிறந்தநாள் பரிசு…” வேண்டாம் என மறுத்த மனைவி…. கடைசியில் நடந்த சோகம்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கனவுகளோடு வந்த கணவர்…! “ஆசையாய் வாங்கிய பிறந்தநாள் பரிசு…” வேண்டாம் என மறுத்த மனைவி…. கடைசியில் நடந்த சோகம்…!!

Published

on

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த தங்கராசு என்பவரின் மகன் ஹரிஹரசுதன் (31) லாரி ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கும் சர்மிளா என்ற பெண்ணிற்கும் கடந்த வருடம் தான் திருமணம் நடைபெற்றுள்ளது. தனது தொழில் நிமித்தமாக மூன்று நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே வீட்டிற்கு வரும் ஹரிஹரசுதன், வருகிற ஜூன் 26-ஆம் தேதி வரவிருக்கும் தனது மனைவியின் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக, நேற்று முன்தினம் இரவு ஒரு புதிய அலைபேசியைப் பரிசாக வாங்கி வந்து அவரிடம் கொடுத்துள்ளார். ஆனால், எதிர்பாராதவிதமாக சர்மிளா அந்தப் பிறந்தநாள் பரிசை ஏற்றுக்கொள்ள மறுத்ததால், கடும் மனவேதனை அடைந்த ஹரிஹரசுதனை அவரது தாயாரும் சகோதரரும் சமாதானம் செய்துள்ளனர்.

இருப்பினும், இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த ஹரிஹரசுதன், நேற்று அதிகாலை தனது வீட்டின் கழிவறைக்குச் சென்று திடீரென தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். காலையில் அவர் தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அக்கம் பக்கத்தினரின் உதவியோடு அவரை மீட்டு உடனடியாக ஆலங்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஹரிஹரசுதன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சோகமான சம்பவம் குறித்துப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், ஆலங்குடி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து வாலிபரின் மரணத்திற்கான பின்னணி குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in