“உன்னை நீல பேரலில் அடைச்சுடுவேன்..!” கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி மிரட்டல்… இளைஞர் தற்கொலை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“உன்னை நீல பேரலில் அடைச்சுடுவேன்..!” கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி மிரட்டல்… இளைஞர் தற்கொலை..!!

Published

on

உத்தரப் பிரதேசத்தின் இடாவா நகருக்கு உட்பட்ட ஆனந்த் நகரைச் சேர்ந்த வினய் யாதவ் என்ற இளைஞர், செவ்வாய்க்கிழமை இரவு தனது வீட்டின் வராண்டாவில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். வினய்யும் அவருடைய மனைவி ரஞ்சனாவும் 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக தம்பதியிடையே தகராறு ஏற்பட்டு, மனைவியின் தவறான நடத்தை மற்றும் மன உளைச்சலால் வினய் கடும் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இறந்த இளைஞரின் தந்தை அனில் குமார் யாதவ் கூறுகையில், தனது மருமகள் ரஞ்சனா கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து கணவரைப் பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வந்ததாகவும், வினய்யை மனரீதியாகத் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாகவும் குற்றம் சாட்டினார். மேலும், ரஞ்சனா தனது கணவரிடம் “உன்னை நீல நிற டிரம்மில் அடைத்து விடுவேன்” என்று அடிக்கடி மிரட்டி வந்ததாகவும், தனது கள்ளக்காதலன் மற்றும் கூட்டாளிகளைக் கொண்டு சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு வினய்யை கொடூரமாகத் தாக்கச் செய்ததாகவும் அவர் புகார் தெரிவித்துள்ளார்.

Advertisement

சம்பவம் நடந்த அன்றைய இரவு, மனைவியுடன் தொலைபேசியில் பேசிய பிறகு வினய் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், அதன்பின்னரே இமுடிவை எடுத்ததாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து வந்த கோத்வாலி காவல் நிலைய போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இறப்பிற்கான காரணத்தைக் கண்டறிய செல்போன் அழைப்பு விவரங்கள் மற்றும் பிற ஆதாரங்களைச் சேகரித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in